செஞ்சுரியா அடிச்சி தள்ளியவருக்கு இப்படி ஒரு சோதனையா? – மோசமான சாதனையில் இணைந்த விராட் கோலி

kohli 2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய.து இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க வீரர்களாக விளையாடிய மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது ஜோடி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27.3 ஓவர்களில் 80 ரன்கள் சேர்த்தது. அப்போது 44 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மன் கில் ஆட்டமிழந்தும் வெளியேறினார்.

gill

- Advertisement -

பின்னர் அடுத்ததாக புஜாரா களம் புகுந்தார். 30வது ஓவரில் இரண்டாவது பந்தில் புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியும் அதே ஓவரில் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்தப்போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி அம்பயரின் தவறான முடிவு காரணமாக ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சாதனையில் இணைந்துள்ளார். அதன்படி இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இந்த டக் அவுட்டுடன் சேர்த்து பத்து முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் டக் அவுட்டாகி உள்ளார். இதன்மூலம் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டாகிய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு கோலி சென்றுள்ளார்.

kohli 4

இவருக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 13 முறை டக் அவுட் ஆகி உள்ளார். அவரை தொடர்ந்து கிரேம் ஸ்மித் 10 முறை டக் அவுட் ஆகி உள்ளார். அவரோடு இணைந்து தற்போது கோலி இந்த மோசமான சாதனையில் இணைந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அம்பயரின் தவறால் ஆட்டமிழந்தாரா கோலி ? கோலியின் விக்கெட்டில் அம்பயர் செய்த தவறு என்ன ? – உண்மை இதோ

அதுமட்டுமின்றி ஒரே ஆண்டில் 4 முறை டக் ஆனதன் மூலம் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் கபில்தேவ் ஆகியோரது மோசமான சாதனையுடன் கோலி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement