அம்பயரின் தவறால் ஆட்டமிழந்தாரா கோலி ? கோலியின் விக்கெட்டில் அம்பயர் செய்த தவறு என்ன ? – உண்மை இதோ

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது கான்பூர் மைதானத்தில் டிராவில் முடிவடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் போது ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-வது டெஸ்ட் போட்டியில் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் அணிக்கு திரும்பியுள்ள அதே வேளையில் ரஹானே காயம் காரணமாக வெளியேறியுள்ளார். கடந்த சில தினங்களாகவே மும்பையில் மழை பெய்து வருவதன் காரணமாக இன்றைய முதல் நாள் ஆட்டம் இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

agarwal

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இந்திய நேரப்படி சுமார் 12 மணிக்கு துவங்கிய இந்த முதல் நாள் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிவுக்கு வந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை குவித்துள்ளது. முதல் விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் மற்றும் அகர்வால் ஜோடி 80 ரன்கள் சேர்த்த நிலையில் முதல் விக்கெட்டாக கில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் ஏற்கனவே பார்மின்றி தவித்து வரும் புஜாரா இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மீண்டும் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன்காரணமாக 80 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் இந்திய அணி கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக களம் புகுந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதமின்றி விளையாடி வரும் விராட் கோலி மீண்டும் புத்துணர்ச்சி பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவரும் 4 பந்துகளை சந்தித்த நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.

kohli 1

அதிலும் குறிப்பாக இந்த இன்னிங்சில் அம்பயர் செய்த தவறு காரணமாக கோலி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஏனெனில் அஜாஸ் பட்டேல் வீசிய அந்த பந்தை கோலி சரியாக டிபன்ஸ் செய்திருந்தார். மேலும் பந்தானது முதலில் பேட்டில் பட்டு பிறகு பேடில் பட்டது. ஆனால் அதனை கணிக்காத களத்தில் இருந்த அம்பயர் அவுட் கொடுக்க மீண்டும் விராட் கோலி மூன்றாவது அவரிடம் ரிவீயுவிற்கு சென்றார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஆட்டமிழந்த விரக்தியில் பவுண்டரி லைன் குஷனை தாக்கிய விராட் கோலி – அபராதம் விதிக்கப்படுமா?

மூன்றாவது அம்பயர் பலமுறை பார்த்த பிறகும் பந்து பேட் மற்றும் பேடில் ஒரே சமயத்தில் பட்டதாக கூறி இதற்கு சரியான ஆதாரம் இல்லை என்பதனால் அவுட் என்று அறிவித்தார். இதன் காரணமாக விராட் கோலி விரக்தியுடன் வெளியேறினார். ஆனால் டிவி ரீப்ளேவில் பந்து தெளிவாக பேட்டில் பட்டு பேடில் பட்டது தெரிந்தது. இது முற்றிலும் 3 ஆவது அம்பயர் செய்த தவறுதான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பினரும் 3 ஆவது அம்பயர் செய்த இந்த தவறுக்கு கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement