ஆட்டமிழந்த விரக்தியில் பவுண்டரி லைன் குஷனை தாக்கிய விராட் கோலி – அபராதம் விதிக்கப்படுமா?

Kohli
Advertisement

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. மழை காரணமாக இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்தப் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பின்னர் சுமார் 12 மணிக்கு துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்ட வேளையில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 70 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது.

kohli 2

முதல் விக்கெட்டுக்கு அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியாரது ஜோடி இணைந்து 80 ரன்கள் சேர்த்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது கில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேற 80 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் 18 ரன்கள் எடுத்து வெளியேற ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடிய அகர்வால் ஆட்டமிழக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது நான்காவது சதத்தை அடித்து 120 ரன்களுடன் ஆட்டமிழக்காமலும், விக்கெட் கீப்பரான சாஹா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

kohli 1

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பியதால் அவர் பெரிதளவு ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 4 பந்துகளை சந்தித்த அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதிலும் குறிப்பாக அம்பயர் செய்த தவறு காரணமாக அவர் ஆட்டமிழந்து வெளியேறியதால் தான் ஆட்டமிழந்தது ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியில் வெளியேறினார்.

இதையும் படிங்க : சென்னை அணிக்காக தக்கவைத்தது குறித்து மொயின் அலி சொன்ன பதில் என்ன தெரியுமா? – விவரம் இதோ

அப்போது அவர் பவுண்டரி லைனுக்கு அருகில் செல்லும் போது அங்கிருந்த விளம்பரப் பலகையை அடித்து விட்டு சென்றார். இதன் காரணமாக அவருக்கு அம்பயரின் முடிவை மீறியதால் வழங்கப்படும் அபராதம் விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement