நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்ற இந்திய தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது ஐந்தாவது வரை தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ட்ரிக்ஸ் வீசினார். அந்த ஓவரில் ரன் எடுக்க ஓடும் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வழியில் நின்று கொண்டிருந்த ஹென்ட்ரிக்ஸ் கையில் இடித்துள்ளார். இதனை அம்பயர்கள் கவனித்து ஐசிசி இடம் கொண்டு சென்றுள்ளனர்.
இதற்கு தற்போது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கோலி விதியை மீறி உள்ளார். மேலும் அவர் ஐசிசி விதி 2.12 ஆட்டத்தின் போது தேவையில்லாமல் மற்ற வீரர்கள் அல்லது அம்பயர் உடன் உடல்ரீதியாக தொடவோ, அடிக்கவோ கூடாது என்ற விதியை மீறி உள்ளார்.
கோலியும் இந்த தவறினை ஒப்புக் கொண்டுள்ளார் எனவே அவருக்கு ஐ.சி.சி கண்டனம் தெரிவித்ததுடன் ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியை கொடுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு மதிப்பிழப்பு புள்ளியை வைத்துள்ளதால் தற்போது மூன்றாவது முறையாக அவர் மதிப்பிழப்பு புள்ளியை பெற்றுள்ளார். எனவே கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் அல்லது இரண்டு ஒருநாள் போட்டியில் தடை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ஆனால் தடை குறித்து உறுதியான தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.