நியூசி அணிக்கு எதிராக டாஸ் வென்றதும் கோலி அளித்த பேட்டியில் என்ன கூறினார் – தெரியுமா ?

Kohli
- Advertisement -

உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.

ind nz

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. டாஸ் போடப்பட்ட பிறகு இந்திய அணியின் கேப்டன் கோலி மைதானத்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் இந்த போட்டி குறித்து கூறியதாவது :

நாங்கள் முதலில் பேட் செய்ய விரும்பினோம் ஏனெனில் இந்த மைதானம் புதிய விக்கெட்டாகவும், கடினமாகவும் இருப்பதால் முதலில் பேட்டிங் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஈரப்பதம் ஏற்பட்டால் விளையாட்டில் அடுத்த பாதி கடினமாக விடும். இருப்பினும் நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று நினைக்கிறேன்.

chahal

மான்செஸ்டரில் 2 நல்ல போட்டிகளை நாங்கள் விளையாடியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்த போட்டியும் விளையாடுவோம் ஏனெனில் நாம் அரையிறுதியில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இன்றைய போட்டியில் குல்தீப் யாதாவிற்கு பதிலாக சாஹல் அணியில் இணைகிறார் என்றும் கோலி கூறினார்.

Advertisement