தோல்வி அடைந்தாலும் இவர்களை பாராட்டியே ஆகவேண்டும். கோலி உற்சாகம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 347 ரன்கள் அடித்தபோதிலும் நியூசிலாந்து அணி அதனை எளிதாக 48.1 ஓவர்களில் சேஸிங் செய்து வெற்றி பெற்றது.

indvsnz

- Advertisement -

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் டெய்லர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு சென்று ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். மேலும் அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்தியன் கேப்டன் கோலி குறிப்பிடுகையில் :

நியூசிலாந்து அணி அற்புதமாக விளையாடியது. 348 ரன்கள் இலக்கு என்பது போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். அந்த அணியின் கேப்டன் டாம் லேதம் போட்டியை எங்களிடமிருந்து பறித்து விட்டார் என்று கூறியிருந்தார் மேலும் மிடில் ஓவர்களில் டெய்லர் மற்றும் லேதம் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி போட்டியை அவர்களுக்கு சாதகமாக எடுத்துச் சென்றார்கள் என்றும் ஃபீல்டில் உள்ள குறைபாடுகளையும் கோலி சுட்டிக் காண்பித்தார்.

Shaw

அதன் பின்னர் பேசிய கோலி தோல்வியை மறந்து இந்திய இளம் வீரர்களை பாராட்ட துவங்கினார். குறிப்பாக இந்திய அணியின் துவக்க வீரர்கள் இருவரும் சிறப்பாக ஆடினார்கள். இருவரும் இதே ஆட்டத்தை வரும் போட்டிகளிலும் கொடுப்பார்கள் என்றும் மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தது மற்றும் ராகுலின் அற்புதமான பேட்டிங் போன்றவை பாராட்டப்பட வேண்டியவை என்று இளம் வீரர்களை அவர் குறிப்பிட்டு பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement