போறபோக்க பாத்தா கோலி இவருக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டாரு போல – பரிதாப நிலையில் சீனியர் வீரர்

Ind
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தனது முதல் 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளதால் அரையிறுதிக்கு செல்லுமா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இனி வரும் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி பெரிய ரன் குவிப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. மற்றபடி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sodhi

- Advertisement -

இந்நிலையில் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளதால் மூன்றாவது போட்டியில் மாற்றம் இருக்குமா ? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி அதிக அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர்.

அதுமட்டுமின்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் ரன்களை வாரி வழங்கிய வருன் சக்ரவர்த்தி அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? என்பது சந்தேகம் தான். இருப்பினும் கோலி அவருக்கு தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளித்து வருகிறார். அதே வேளையில் தமிழக வீரரான அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பினை கொடுக்க கோலி மறுத்து வருகிறார்.

ashwin

மேலும் இந்த தொடரில் அஷ்வின் தேர்வாகி இருந்தாலும் அவர் விளையாடுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினை ஒதுக்கி வரும் கோலி தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அஷ்வினை ஒதுக்க வாய்ப்புள்ளது. இந்த தொடர் ஆரம்பித்ததிலிருந்து பவுலர்கள் சரியாக செயல்படவில்லை என்றாலும் அஷ்வினுக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி வரும் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளதால் கோலி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : போட்டி முடிஞ்சி பும்ராவை ஏன் அனுப்புனீங்க ? கோலி ரவி சாஸ்திரிக்கு பயமா ? – அசாருதீன் கண்டனம்

இருப்பினும் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் அஷ்வினுக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஒருவேளை வருண் சக்கரவர்த்தி அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவருக்கு பதிலாக ராகுல் சாஹர் தான் விளையாடுவார் என்று பேசப்படுகிறது. இதன் காரணமாக அஷ்வின் அணியில் விளையாட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement