- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 ஆவது சதத்தை நிறைவு செய்த கோலி – சாதனை விவரம் இதோ

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி உணவு இடைவேளை வரை 356 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 58 ரன்களும், கோழி 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்று அடித்த சதத்தின் மூலம் தனது 26வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் இந்த சதத்தை அடிக்க அவர் 10 இன்னிங்ஸ்களாக அவர் காத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இதுவே இந்திய மண்ணில் கோலி அடித்த முதல் சதமாகும்.

மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கி கோலி இதுவரை சதமடிக்கவில்லை. எனவே இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனது முதல் சதத்தை கோலி அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by