ஆட்டமிழந்த விரக்தியில் மைதானத்தில் இருந்த சேரை பேட்டால் அடித்த விராட் கோலி – வைரலாகும் வீடியோ

Kohli
- Advertisement -

14வது ஐபிஎல் தொடரின் 6-வது போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற டேவிட் வார்னர் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி பெங்களூரு அணியில் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.

rcb vs srh

- Advertisement -

கொரோனா பாதிப்பிற்கு பிறகு மீண்டு வந்த படிக்கல் இன்று விராட் கோலியுடன் களமிறங்கினார். 13 பந்துகளை சந்தித்த நிலையில் படிக்கல் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஒருபக்கம் விராட் கோலி மெதுவாகவே விளையாடி வந்தார். ஆனாலும் ஓவர்கள் சென்று கொண்டே இருக்க கோலி ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக வைத்து விளையாடவில்லை.

ஒருகட்டத்தில் அணியின் ஸ்கோர் குறைந்துகொண்டே சொல்ல அதனை அதிகரிக்க வேண்டும் என்று விராட் கோலி முயற்சித்தார். அந்த வேலையில் ரஷித் கான் மற்றும் சபாஷ் நதீம் ஆகியோர் எதிரணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். இதனால் ரன் ரேட்டை அதிகரிக்கும் நோக்கில் 13 ஆவது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை சிக்சருக்கு அடிக்க முயற்சித்த கோலி டாப் எட்ஜ் ஆகி லெக் சைடில் இருந்த விஜய்சங்கர் கையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.

kohli 1

அணிக்கு ரன்கள் தேவை என்ற முக்கியமான கட்டத்தில் ஆட்டம் இழந்து வெளியேறியதை விராட்கோலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தனது பொறுமையை இழந்த விராட் கோலி ஆட்டமிழந்து வெளியே செல்கையில் பவுண்டரி லைனைக் கடந்து வீரர்கள் அமரும் சேரை தனது பேட்டால் அடித்து விட்டு உள்ளே சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் விக்கெட் விழுந்ததில் எவ்வளவு அழுத்தத்திலிருந்து இருப்பார் என்பது பிரதிபலிக்கிறது. முதலில் தற்போது பேட்டிங்கை முடித்துள்ள பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 149 ரன்கள் குவிக்க 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement