கோலியின் வாழ்த்து. தொடர்ந்து அடித்து அசத்தும் ப்ரித்வி ஷா -வெளியான ரகசியம்

Prithvi

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரரான ப்ருதிவி ஷா இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்களை குவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக அறிமுகம் ஆன இவர் தான் பங்கேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Prithvi_Shaw

இவர் சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை இருமல் மருந்து கலந்து உட்கொண்டதாக இவர் மீது சோதனையில் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. மேலும் அதனை அவருக்கு தெரியாமலே அவர் உட்கொண்டார் என்பதும் தெரியவந்தது.

இதனால் இவர் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட மார்ச் மாதம் 16ம் தேதியிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய தடைக்காலம் முடிவடைந்ததால் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் சையது முஷ்டாக் அலி டி20 தொடருக்கான மும்பையில் அணியில் மீண்டும் பங்கேற்றார்.

Prithvi-Shaw

அதன்படி தடையில் இருந்து மீண்ட இளம் வீரர் ப்ருதிவி ஷா அசாம் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். இந்த போட்டியில் 32 பந்துகளை சந்தித்த பிரித்வி ஷா அரைசதம் அடித்தார். மேலும் அதற்கடுத்த போட்டிகளிலும் 24 பந்துகளில் 50 ரன்கள், 17 பந்துகளில் 30 ரன்கள், 39 பந்துகளில் 64 ரன்கள் மற்றும் 19 பந்துகளில் 30 ரன்கள், 27 பந்துகளில் 53 ரன்கள் அடித்து துவம்சம் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ப்ரித்வி ஷா பயன்படுத்தும் பேட்டில் விராட் கோலி எழுதி ஒரு வாசகத்தை எழுதி கையெழுத்திட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அந்த பேட்டில் “டியர் பிரிதிவி என்ஜாய் த கேம் குட்லாக்” என்று எழுதி கோலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.