Virat Kohli : ஷமியா ? புவியா ? தேர்வு செய்வதில் எனக்கு தலைவலி உள்ளது – கோலி

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி

Kohli
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது காரணமாக இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

Bhuvi

- Advertisement -

அடுத்ததாக இந்திய அணி இன்று 30ம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது 2 அணிகளுக்குமே இந்த போட்டியை முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. ஏனெனில் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று கருதப்படும் இந்த இரண்டு அணியும் மோதுவதால் இந்த போட்டிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது : புவனேஸ்வர் குமார் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். ஷமி சென்ற ஆண்டிலிருந்து பிட் ஆகி தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றி வருகிறார். புவனேஸ்வர் குமார்விரைவாக குணமாகி வருகிறார்.

Shami

எனவே இந்திய அணியில் இவர்கள் இருவரில் யாரை இன்றைய போட்டியில் தேர்வு செய்வது என்ற ஆரோக்கியமான தலை வலி எனக்கு உள்ளது. ஏனெனில் புவனேஸ்வர் குமார் விரைவாக குணமடைந்து வருகிறார். ஷமி விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். இவர்கள் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது இன்றைய சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என்று கோலி கூறியுள்ளார்.

Advertisement