இதுக்கு முன்னாடி யாரும் சாதிக்கலயாம். கோலி அதிசயத்தை நிகழ்த்துவாரா ? – நியூசி தொடரில் கோலிக்கு காத்திருக்கும் சவால்

Kohli
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

Kohli

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அந்த சவால்கள் குறித்து ஆச்சரியமான விஷயங்களை இதில் பார்க்கலாம். இதுவரை 78 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நியூசிலாந்து மண்ணில் நாளை விளையாட போகும் ஆட்டமே முதல் டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக விளங்கும் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கும் இதுவே முதல் டி20 போட்டியாகும். இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து வந்த இந்திய அணியில் இவர்கள் இருவரும் ஓய்வில் இருந்தனர். அதுமட்டுமின்றி தொடர்ந்து சதங்களை அடித்து வரும் இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா நியூசிலாந்து மண்ணில் எந்த வகை கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kohli

இப்போது உள்ள இந்திய அணி எந்த நாட்டிலும் எந்த அணிக்கு எதிராகவும் தொடரை கைப்பற்றும் அளவிற்கு பலமாக இருக்கிறது என்றாலும் இதுவரை நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வென்றதில்லை. இதற்கு முன்னர் நடந்த 2 டி20 தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இம்முறையாவது இந்த மோசமான சாதனையை மாற்றி விராட் கோலி தலைமையிலான அணி சாதிக்குமா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement