நாளைய போட்டியில் ரிக்கி பாண்டிங்கின் சாதனை தகர்க்க உள்ள கோலி – சாதனை விவரம் இதோ

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது ஏழாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

Kohli

- Advertisement -

மேலும் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் அந்த போட்டியில் படைத்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அதிக முறை கேப்டனாக 150 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மேலும் கோலிக்கு அந்த 254 ரன்களே அவர் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆக மாறியது. இத்தனை சாதனைகளுக்கு பிறகு கோலி தற்போது நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில் நாளை துவங்கும் அந்த போட்டியில் இந்திய கேப்டன் கோலி மேலும் ஒரு புதிய சாதனையை படைக்க உள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை கேப்டனாக அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற பட்டியலில் 19 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் உடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் கோலி நாளைய போட்டியில் சதம் அடிக்கும் பட்சத்தில் 20 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த கேப்டன்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிப்பார்.

Kohli 1

இந்த பட்டியலில் 25 சதங்களுடன் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் முதல் இடத்தில் உள்ளார். நாளைய போட்டியில் நிச்சயம் கோலி சதம் அடித்து சாதிப்பார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால் நாளைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement