கிரிக்கெட் மீது உள்ள அர்ப்பணிப்பு என்றால் அது இதுதான். கோலியின் செயலால் வியந்த ரசிகர்கள் – விவரம் இதோ

Kohli-ABD
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும், விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே குவித்தது.

RCBvsKKR

- Advertisement -

துவக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன் பின்னர் எந்த இடத்திலுமே கொல்கத்தா அணியால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதிகபட்சமாக மோர்கன் 30 ரன்களையும், லோகீ பெர்குசன் 19 ரன்களை குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி சுருண்டது என்றே கூறலாம்.

அதன் பின்னர் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா பெங்களூரு அணி 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் படிக்கல் 25 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் குர்கீரத் சிங் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணியின் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

rcb

இந்த போட்டியில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து விளையாடிய போது 3 ஆவது வீரராக களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 17 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அப்போது ஒருகட்டத்தில் 40 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் விராத் கோலி பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த பந்தை தட்டி விட்டு 2 ஓடினார்.

- Advertisement -

வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே வெற்றிக்கு தேவை பட்டாலும் அவர் இரண்டாவது ரன் ஓடியது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் 2 ரன்கள் ஓடிய அந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் வெற்றிக்கு பின் எக்ஸ்ட்ரா ரன்கள் ஓடினால் சேர்க்கப்படாத நிலையிலும் கிரிக்கெட்டின் மீது உள்ள அன்பும் அர்ப்பணிப்பையும் கோலி வெளிக்காட்டியுள்ளார் என்று கூறியுள்ளனர்.

மேலும் கிரிக்கெட்டின் மீது அவர் வைத்திருக்கும் காதல், மரியாதைய என அனைத்தையும் விராட் கோலி இந்த ரன்னிங் ,மூலம் வெளிப்படுத்தி உள்ளார் என்று அவரை பாராட்டி புகழ்ந்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement