டி20 தொடரின் வெற்றி கோப்பையை கையில் வாங்கியதும் கோலி செய்த செயல் – மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற நடராஜன்

Nattu-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. முன்னதாக நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்ததால் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக அளித்தனர். மேலும் இந்த தொடரில் முழுநேரமாக களமிறங்கிய பாண்டியா மூன்று போட்டிகளிலும் தனது அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

pandya

- Advertisement -

தொடர் நாயகன் விருதை பெற்ற பின்னர் அவர் தனது தொடர் நாயகன் விருதை நடராஜனுக்கு கொடுத்து அழகு பார்த்தார். அதே வேளையில் இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் டி20 தொடருக்கான வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. அந்த வெற்றி கோப்பையை கையில் வாங்கியதும் விராட்கோலி நேராக அதனைக் கொண்டு வந்து தமிழக வீரரான நடராஜனிடம் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படி கூறினார்.

இந்திய அணியில் பொதுவாகவே ஒரு பழக்கம் இருந்து வருகிறது. அது யாதெனில் அணியில் யாரேனும் அறிமுகமானால் அந்த புதுமுக வீரர் இடம் வெற்றிக் கோப்பையை கொடுத்து அவர்களை நடுவில் அமர வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பார்கள். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் இந்திய அணி தொடரை கைப்பற்றிய பிறகு நடராஜனிடம் கோலி கோப்பையை கொடுத்துவிட்டு ஒரு ஓரத்தில் சென்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க நின்றார்.

INDvsAUS

கோலியின் இந்த செயல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் நடராஜன் தான் பங்கேற்ற முதல் தொடரின் வெற்றியை மைதானத்தில் அனைவருடனும் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக பாண்டியாவுடன் அதிக புகைப்படங்களை எடுத்துக் கொண்ட அவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் 17 ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்குகிறது. இந்த போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.

Advertisement