இன்றைய போட்டியில் கோலி பாலோ ஆன் கொடுக்க இதுதான் காரணமாம் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே 115 ரன்களும் ஜடேஜா 51 ரன்களும் எடுத்தனர்.

Ind

- Advertisement -

போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்போது நடந்து வருகிறது நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி இன்று காலையும் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. இன்று தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஹம்சா 62 ரன்களை குவித்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 335 ரன்கள் இந்திய அணியை விட பின்தங்கியுள்ளது. இந்நிலையில் கோலி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு மீண்டும் பாலோ ஆன் கொடுத்துள்ளார். அதற்கு காரணம் யாதெனில் இன்று மூன்றாவது நாளே போட்டி நடைபெறுவதால் இன்னும் முப்பது ஓவர்களுக்கு மேல் இந்திய அணி பந்து வீச முடியும்.

Umesh

எனவே இன்றைய நாள் ஆட்டநேரமுடிவிற்குள் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் சில விக்கெட்டுகளை கைப்பற்றும் என்பதால் கோலி பாலோ ஆன் கொடுத்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணி இந்திய அணியை விட 335 ரன்கள் பின் நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.

Advertisement