சேரை அடித்தது மட்டுமல்லாமல், கோலி ஆக்ரோஷத்தில் செய்த மற்றொரு காரியம் – எச்சரித்த அம்பயர்

Kohli
- Advertisement -

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் மேட்சில் பெங்களூர் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் குவாரன்டைன் முடிந்து அணிக்கு திரும்பிய தேவ்தத் படிக்கல்லும் அணித்தலைவர் கோலியும் ஓப்பனிங்கில் களம் இறங்கினர். 3வது ஓவரில் 11 ரன்களில் படிக்கல் வெளியேற அடுத்த வந்த ஷபாஷ் அஹமத்தும் 7வது ஓவரில் 14 ரன்களில் வெளியேறினார். எனவே அணியை சரிவில் இருந்து மீட்க மேக்ஸ்வெல் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அணித்தலைவர் கோலி.

- Advertisement -

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கோலி, ஜேசன் ஹோல்டர் வீசிய 13வது ஓவரின் முதல் பந்தில் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடிக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டை 33 ரன்களில் இழந்தார். லெக் சைடில் ஹோல்டர் வீசிய பந்தின் வேகத்தை கணிக்கத் தவறிய கோலி தனது விக்கெட்டை இழந்தார். இதனால் கோபமடைந்த கோலி பெவிலியனுக்கு திரும்பும்போது அங்கிருந்த விளம்பரப் பலகையையும், நாற்காலியையும் பேட்டால் அடித்தார். இது மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் தெளிவாக பதிவானது.

கோலியின் இச்செயலானது ஐபிஎல் விதிமுறையின்படி, லெவல் ஒன்று உட்கூறு 2.2ன் படி கிரிக்கெட் பொருட்கள், ஆடைகள் மற்றும் மைதானத்தில் உள்ள பொருட்கள் ஆகியவற்றிற்கு சேதம் விளைவிக்கும் விதி மீறலாகும்.

kohli

கோலியின் இச்செயலைப் பார்த்த ஆட்டத்தின் நடுவர் வெங்காலில் நாரயண் குட்டி, கோலியை எச்சரித்துள்ளார். இதேபோன்று 2016ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டாகி வெளியே சென்ற கம்பீர் விளம்பரப் பலகையை எட்டி உதைத்ததால் அவருக்கு ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 15% அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Kohli

ஆனால் இப்போட்டியின் நடுவர், கோலிக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் முதல் முறையாக நடைபெற்ற இந்த சம்பத்தால் அவரை எச்சரித்து மட்டும் விட்டிருக்கிறார்.

Advertisement