மைதானத்திலேயே படிக்கல் மீது கோபப்பட்ட விராட் கோலி. முகம்சுளிக்கும் அளவிற்கு என்ன நடந்தது – விவரம் இதோ

Kohli-angry

நேற்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இரவு போட்டியாக நேற்று இந்த போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் ராகுல் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அதன் பின்னர் விளையாடிய பெங்களூரு அணியால் 20 ஓவர் முடிவில் 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

gayle

நேற்றைய போட்டியில் கோலி மற்றும் படிக்கல் ஓப்பனிங் விளையாடினார். படிக்கல் நேற்று நன்றாக விளையாடி வெற்றிக்குத் துணை நிற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 7 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கேப்டன் விராட் கோலியும் 35 ரன்களுக்கு அவுட் ஆகிவிட, அதேசமயம் மேக்ஸ்வெல் மற்றும் டி வில்லியர்ஸ் வந்த வேகத்தில் வெளியே சென்று விட பெங்களூர் அணியால் அதன் பின்னர் திரும்ப ஆட்டத்திற்கு வர முடியவில்லை.

சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிக அற்புதமாக விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்த படிக்கல், இந்த ஆண்டு நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் மிக அபாரமாக விளையாடி உள்ளார். இவர் மற்ற அனைத்துப் போட்டிகளிலும் ஒரே தவறையே செய்து வருகிறார்.

Padikkal-1

தவறான ஷாட் அடிக்கப் போய் அவுட் ஆகி விடுகிறார். நேற்று மெரெடித் வீசிய ஓவரில் சிக்சர் அடித்து விட்டு அதற்கு அடுத்த பந்தே பேட்டை கண்டமேனிக்கு சுற்றினார். இதன் காரணமாக அவர் வீசிய பந்தில் படிக்கல் போல்ட் அவுட் ஆகினார். தவறான ஷாட் அடிக்கப் போய் அவுட்டானது ரசிகர்களை மட்டுமின்றி களத்தில் நின்று கொண்டிருந்த விராட் கோலியும் கோபப்படுத்தியது. அவர் முன்னரே நேரடியாக விராட் கோலி முகம் சுளித்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் படிக்கல் கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விளையாட வில்லை என்று தங்களது கருத்துக்களைக் கூறி வந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் படிக்கல் அவருடைய ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும், அதேபோல அவர் பந்தை எப்படி கையாள்வது என்றும், நிதானமாக விளையாடி எப்படி ஸ்கோர் செய்ய வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு விளையாட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

padikkal 1

படிக்கல் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்பது அனைவரது வேண்டுகோளாக இருக்கிறது. இவர் இப்படி தொடர்ந்து தவறாக விளையாடி கொண்டிருந்தால், எப்படி இவரால் இந்திய அணியில் சேர முடியும் என்றும் விவாதித்து வருகின்றனர்.