பிங்க் பால் டெஸ்ட் போட்டி அடிக்கடி வேணாம். ரொம்ப கஷ்டமா இருக்கு – புலம்பிய இந்திய வீரர்

Net
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் பிங்க் பால் கொண்டு இந்த போட்டி நடைபெற்று வருவதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. போட்டி தற்போது மூன்றாம் நாளை எட்டியுள்ள நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

saha 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த பிங்க் பால் குறித்தும் பகல் இரவு டெஸ்ட் போட்டி குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : கடந்த சில தினங்களாக பிங்க் பந்தில் பீல்டிங் செய்வது எனக்கே சில விஷயங்களில் ஆச்சரியமாக தெரிந்தன. ஏனெனில் ஸ்லிப் பகுதியில் நின்று பந்தை பிடிக்கும் போது பந்து கைகளை கடினமாக தாக்குகிறது. கிட்டத்தட்ட ஹாக்கி பந்து போல இருக்கும் பந்து அதிக கனமாக உள்ளது அதற்கு காரணம் அது மேல் பூசப்பட்டிருக்கும் வர்ணமாக இருக்கலாம்.

மேலும் எல்லைக் கோட்டில் இருந்து பந்தை கீப்பர்க்கு த்ரோ செய்யும்போதும் கூடுதல் சக்தி தேவைப்படுகிறது. பகல் வேளையில் உயரமான காட்சிகளை பிடிப்பது மிகக் கஷ்டமாக இருக்கிறது வழக்கமான சிகப்பு மற்றும் வெள்ளை பந்து உயரத்தில் இருந்து வரும் பொழுது சரியாக கணித்து விடலாம் ஆனால் இந்த பந்து உயரத்திலிருந்து கீழே வரும்போது எவ்வளவு வேகமாக வருகிறது மேலும் கனமாக வருகிறது என்பதை யூகிக்க முடியவில்லை.

Pujara

அதே போல் சூரியன் மறையும் அந்த சமயத்தில் பந்தை தெளிவாக பார்க்க முடியவில்லை பந்து தூரத்தில் வருவது போல் தெரிகிறது ஆனால் சீக்கிரமாக வந்து கைகளை பதம் பார்த்து விடுகிறது எனவே அனைவரும் கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது. மேலும் பனிபொழிவின் போது பந்து எவ்வாறு செயல்படுகிறது என்றும் இன்னும் தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் நடக்கும் போது வித்யாசம் தெரியும் என்று நினைக்கிறேன்.

Rohith

எனவே இனிமேல் தொடர்ந்து பகல் இரவு டெஸ்ட் போட்டி பிங்க் பால் போட்டி என வைக்க வேண்டாம் ஒரு அட்டவணை வைத்து சீரான இடைவெளியில் இதுபோன்ற டெஸ்ட் போட்டிகளை நடத்தலாம். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் சுவாரசியம் அதிகரிக்கவே இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் முழுவதும் டெஸ்ட் போட்டியில் இருந்து சுவாரஸ்யம் குறையவில்லை ஏனெனில் டெஸ்ட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் எனவே அவர்களுக்காக நாம் டெஸ்ட் போட்டி நடத்துவோம் என்று கோலி கூறினார்.

Advertisement