Virat Kohli : தென்னாப்பிரிக்க அணியை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது – கோலி பேட்டி

kohli
- Advertisement -

உலக கோப்பை தொடர் போட்டிகள் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் தங்களது துவக்க ஆட்டத்தில் விளையாடி விட்ட நிலையில் இந்தியா நாளை தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி கடந்த இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்யும்.

Kohli

- Advertisement -

அதே போன்று தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தன்னம்பிக்கையுடன் தொடரை ஆரம்பிக்க இந்திய அணி முயற்சி செய்யும். சவுதாம்ப்டனில் நாளை நடைபெற உள்ள இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும் டு பிளிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளைய தென்னாப்பிரிக்க அணியுடனான போட்டிக்கு முன்பு தென்னாபிரிக்க அணியின் நிலைமை குறித்து இந்தியாவின் கேப்டன் விராத் கோலி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் கோலி கூறியதாவது : தென்னாபிரிக்க அணி பலமான அணிதான் இருப்பினும் இது போன்ற பெரிய தொடர்களில் அவர்களுக்கு ஏதாவது சிக்கல் ஏற்படுகிறது.

Saa

அந்த வகையில் இந்த தொடரில் அவர்களது வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகின்றனர். நெகிடி ஏற்கனவே காயமுற்று இருக்கும் நிலையில் தற்போது ஸ்டெயின் அணியில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார் .இதனால் அந்த அணியை நினைத்து எனக்கு பரிதாபமாக உள்ளது இருந்தாலும் அவர்கள் இப்போதும் மிக பலமான அணியாகவே இருக்கின்றனர். ஆகவே நாளைய போட்டியில் அவளுடன் எளிமையாக ஆடாமல் முழுஈடுபாட்டுடன் ஆடி வெற்றி கணக்கை துவங்க இருக்கிறோம் என்று கோலி கூறினார்.

Advertisement