Virat Kohli : தோனி, ஜாதவ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என யாரும் தோல்விக்கு காரணம் இல்லை – கோலி

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து

Dhoni
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.

Ind vs Eng

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக பேர்ஸ்டோ 111 ரன்களை குவித்தார். பென் ஸ்டோக்ஸ் 79 ரன்கள் குவித்தார்.

பிறகு 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியை இந்திய அணிக்கு இந்த தொடரின் முதல் தோல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chahal

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது : இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மீது எந்த தவறும் இல்லை. ஏனெனில் பவுண்டரி எல்லைகள் மிகச் சிறியதாக இருந்தன. அதனால் ஸ்வீப் ஷாட் அடித்தாலும், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடித்தாலும் அது சிக்சருக்கு பறந்தன. இந்த சிறிய பவுண்டரி எல்லைகளை வைத்துக்கொண்டு ஸ்பின்னர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார். குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் இணைந்து 160 ரன்களை விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni 1

அடுத்தது தோனி மற்றும் ஜாதவ் ஆகியோர் அடித்து ஆட விரும்பினர். அவர்கள் பவுண்டரிகள் நோக்கத்தில் ஆடினாலும் மைதானம் மந்தமாக இருந்ததால் அவர்களது ஆட்டத்திற்கு அது ஒத்துழைக்கவில்லை. மேலும் மைதானம் மந்தமாக இருப்பது புரிந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக்கி மெதுவாக பந்துகளை வீசினார்கள். இதனால் பந்துகளை அடித்தாலும் அது பவுண்டரிக்கு செல்லவில்லை. இதனால் தோனி மற்றும் ஜாதவ் மீது எந்த தவறும் இல்லை என்று தோல்வி குறித்து கோலி விளக்கமளித்தார்.

Advertisement