கேப்டனாக ரிக்கி பாண்டிங் சாதனையை சமன் செய்த கோலி – விவரம் இதோ

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

கோலியின் இந்த 26 ஆவது சதத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். அதாவது கேப்டனாக இதுவரை ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணிக்காக 19 சதங்களை அடித்துள்ளார்.

Kohli

தற்போது கோலி இந்தியாவுக்காக 19 சதங்களை கேப்டனாக அடித்து அவரது சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் க்ரீம் ஸ்மித் 25 சதங்கள் அடித்து கேப்டனாக அதிக சதங்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement