பாடலுக்கு ஏற்றவாறு கெயிலுடன் சேர்ந்து ஆனந்த கூத்தாடிய கோலி – வைரலாகும் வீடியோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இந்த போட்டி மழை பாதிப்பு காரணமாக போட்டி 34 ஓவர்கள் குறைக்கப்பட்டது. அதன்பிறகும் மழை குறுக்கிட்டதால் முதல் ஒருநாள் போட்டி கைவிடப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான கோலி கரிபியன் ஸ்டைலில் ஆடிய நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கெயில் அருகில் சென்று மைதானத்தில் ஒலித்த பாடலுக்கு ஏற்ப தனது நடனத்தை ஆடினார்.

கெயிலும் விராட் கோலியின் நடன அசைவுக்கு ஏற்றாற்போல் அவருடன் இணைந்து நடனம் ஆடினார். மழைகாரணாமாக இருந்தபோது கூட மைதானத்தின் வெளியே நடனம் ஆடிக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

கெயில் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையே நல்ல நட்பு உள்ளது. ஏனெனில் கோலியின் தலைமையில் கெயில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக பெங்களூரு அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement