கங்குலியை முந்தி ஒருநாள் போட்டிகளில் கோலி புதிய சாதனை. ஆனா தோனிதான் டாப்ல இருக்காரு – விவரம் இதோ

Kohli-2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து செய்தது அதன்படி இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரர்களாக அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடியது. அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கோலி அரைசதம் அடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் கோலி சவுரவ் கங்குலியின் சாதனை ஒன்றை தாண்டியுள்ளார். அதன்படி கேப்டனாக கங்குலி ஒருநாள் போட்டிகளில் 142 இன்னிங்சில் 5082 ரன்கள் அடித்துள்ளார். அதனை இன்று கடந்த கோலி 83 இன்னிங்சில் 5123 ரன்கள் அடித்துள்ளார்.

Kohli

இந்த பட்டியலில் முதலிடத்தில் தோனி 6641 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே பல்வேறு சாதனைகளை படைத்து வரும் கோலி அடுத்தடுத்து மிகப்பெரிய ரன்களையும் குவித்து அசத்திவருகிறார்.

Advertisement