அடேங்கப்பா அடித்த 94 ரன்களில் இதனை சாதனையா ? – வியக்கவைத்த கோலி

Kohli-2

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 94 ரன்கள் குவித்து அசத்தினார். அவரின் இந்த அசாத்தியமான பேட்டிங் மூலம் ஏகப்பட்ட சாதனைகளை நேற்று அவர் செய்தது குறிப்பிடத்தக்கது.
அந்த சாதனைகளை தற்போது பார்க்கலாம்.

Kohli 1

வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 208 ரன்களை துரத்தி வெற்றி பெற்றதால் டி20 கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் இலக்கைத் துரத்தி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் 94 ரன்கள் எடுத்த விராட் கோலி இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது டி20 போட்டியில் அவரது 12 ஆவது ஆட்டநாயகன் விருதாகும்.

இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற ஆப்கானிஸ்தான் வீரரான முகமது நபியின் சாதனையை சமன் செய்தார். அதுமட்டுமின்றி அரை சதம் விளாசிய விராட் கோலி டி20 தனது 23 ஆவது அரைசதமாக இதனை பதிவு செய்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர்களில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி தற்போது மீண்டும் கோலி முதலிடத்திற்கு வந்துள்ளார்.

kohli 3

மேலும் இப்போட்டியில் கோலி அடித்த 6 சிக்சர்கள் மூலம் டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவை பின்னுக்குத்தள்ளி அதிக சிக்ஸ் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தார். இதற்கு முன்னர் டி20 போட்டிகளில் இந்தியா சார்பாக அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித்சர்மா (115 சிக்ஸர்கள்), யுவராஜ்சிங் (74 சிக்சர்கள்) அடித்து முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -