Virat Kohli : அரையிறுதி போட்டியில் விராட் கோலி ஆடுவதற்கு தடையா ?- ஐ.சி.சி தடைக்கான விதி

இந்திய அணி நேற்று வங்கதேச அணியை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு புதிதாக ஒரு சிக்கல் ஒன்று அரையிறுதிப் போட்டிக்கு

Kohli-4
- Advertisement -

இந்திய அணி நேற்று வங்கதேச அணியை தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு புதிதாக ஒரு சிக்கல் ஒன்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக உண்டாகி உள்ளது. அவர் அரையிறுதி போட்டியில் விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Kohli-3

- Advertisement -

இந்த சிக்கல் யாதெனில் நேற்று 12-வது ஓவரை ஷமி வீசினார் அப்போது சவுமியா சர்க்கார் அந்தப் பந்தை பேடில் வாங்க அதனை அவுட் என்று அம்பயரிடம் முறையிட்டார் ஷமி. ஆனால் அதனை அவுட் இல்லை என்று அம்பயர் கூறினார். உடனே கோலி ரிவ்யூ எடுத்தார். தொலைக்காட்சியில் பந்து பேடையும், பேட்டையும் ஒரே நேரத்தில் அடித்தது. ஆனால் மூன்றாவது ஆம்பியர் இதற்கு அவுட் கொடுக்க மறுத்தார்.

உடனே கோலி களத்திலிருந்த அம்பயர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்து முதலில் பேடில்தான் பட்டது பேட்டில் படவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார் கோலி. அவர் இப்படி வாக்குவாதத்தில் ஈடுபடுவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அம்பயறுடன் வாக்குவாதம் ஏற்பட்டு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

kohli 2

இந்நிலையில் ஐசிசியின் திருத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டு விதிப்படி ஒரு வீரர் இரண்டு வருடங்களுக்கு உள்ளதாக அதாவது 24 மாதங்களுக்குள் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது 2 டி20 போட்டியில் அல்லது ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்பது ஐ.சி.சி யின் விதி. கோலி தற்போது 3 டீமெரிட் புள்ளிகளுடன் உள்ளதால் அவர் அரையிறுதியில் விளையாடுவதற்கு சிக்கல் உண்டாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement