- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 மாசத்துல முடிவுக்கு வந்த விராட் கோலியின் ராஜநடை – இதை கவனிச்சீங்களா? (இவருக்கா இப்படி?)

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி எப்பொழுதுமே அணியின் வெற்றிக்காக முழு ஈடுபாடுடன் விளையாடக் கூடியவர். களத்தில் அவர் காட்டிய ஆக்ரோஷம் மற்றும் பேட்டிங்கில் அவர் ஆடிய அதிரடியையும் ரசிகர்களாகிய நம்மால் எளிதில் மறந்து விட முடியாது. அப்படி கிரிக்கெட் உலகின் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த விராட் கோலிக்கு கடந்த சில மாதங்களாகவே நேரம் சரியில்லாமல் இருந்து வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரோடு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

அதனை தொடர்ந்து இந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்படும் போது அவர் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நடைபெற்று முடிந்துள்ள இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

நவம்பர் மாதம் வரை மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி அதற்குப்பிறகு மூன்று மாதங்களில் அனைத்து விதமான பொறுப்பில் இருந்தும் தற்போது வெளியேறியுள்ளார். தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு இருந்தாலும் இந்த மூன்று மாதங்களில் மொத்த விடயமும் மாறிவிட்டது என்றே கூறலாம்.

இதுவரை ஐசிசி கோப்பைகளை விராட் கோலி வெல்லவில்லை என்றாலும் வேறு எந்த கேப்டனும் செய்யாத பல சாதனைகளை அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்தியுள்ள அவர் 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி அதில் 40 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோஹித் வேணாம். இவரை டெஸ்ட் டீமுக்கு கேப்டனா போடுங்க – சுனில் கவாஸ்கர் விருப்பம்

வெளிநாடுகளில் இந்திய அணி வெற்றி பெறாது என்ற நிலையை மாற்றி வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளை அவர்களின் நாட்டிற்கே சென்று வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by