டான் பிராட்மேனை அசால்டாக ஓரங்கட்டிய கிங் கோலி – புதிய சாதனை

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273 ரன்கள் குவித்து இருந்தது.

Kohli-3

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் கோலி ஆட்டமிழக்காமல் 194 ரன்கள் குவித்திருந்தார். தொடர்ந்து ஆடிவரும் இந்திய அணி தற்போதுவரை 4 விக்கெட் இழப்பிற்கு 572 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

கோலி 235 ரன்களுடனும் மற்றும் ஜடேஜா 81 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் கோலி அடித்த இரட்டை சதம் மூலம் ஏகப்பட்ட உலக சாதனைகளை படைத்துள்ளார் என்பது நமக்கு தெரியும். தற்போது அதைவிட ஒரு பெரிய சாதனையாக டான் பிராட்மேன் சாதனையை தற்போது கோலி முறியடித்துள்ளார்.

Kohli

அந்த சாதனை யாதெனில் கேப்டனாக 150 ரன்கள் மேல் அதிக முறை அடித்த வீரர் என்ற பெருமையை டான் பிராட்மன் 8 முறை (150+) அடித்து அந்த சாதனையை வைத்து இருந்தார் ஆனால் அதனை தற்போது கேப்டனாக கோலி 150 ரன்களுக்கு மேலாக 9 முறை அடித்து டான் பிராட்மேன் பல ஆண்டு சாதனையை உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement