தோல்விக்கு காரணம் இவர்கள் தான். கொஞ்சம் கண்ணை திறந்து ஆடடத்தை பாருங்கள் – கோவத்தில் கோலி

Kohli-1
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

- Advertisement -

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

தோல்விக்கு பிறகு பேசிய பெங்களூரு கேப்டன் கோலி கூறியதாவது : நாம் ஒன்றும் கிளப் போட்டியில் ஆடவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் ஆடிவருகிறோம். தொடரில் நாடாகும் போட்டியில் அம்பயர்கள் இப்படி கவனக்குறைவாக இருக்கக்கூடாது. அம்பயர்கள் கண்ணை திறந்து வைத்திருந்தால் அது ஆட்டத்தின் முடிவை ஆற்றி இருக்கும். இதுபோன்ற ஆட்டங்களில் இந்த சிறிய தவறே ஆட்டத்தின் முடிவை மாற்றுகிறது.

பும்ரா சிறப்பாக பந்துவீசினார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் அவர் ஏற்படுத்திய அழுத்தமும் எங்களது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினார். இந்த பேட்டியின் ஆரம்பத்தில் கோலி கோபத்துடன் அம்பயர்களை திட்டியவாறு பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement