ஒரே நேரத்தில் பாண்டிங் மற்றும் சச்சினின் சாதனையை காலி செய்த விராட் கோலி – விவரம் இதோ

Sachin
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 71வது இன்டர்நேஷனல் சதம் அடிப்பார் என்று பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தபோதிலும் வேறுவிதமான சாதனையை நிகழ்த்தி ரசிகர்களை விராட் கோலி திருப்தி படுத்தியுள்ளார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 219 இன்னிங்ஸ்களில் தனது சொந்த மண்ணில் பத்தாயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.

kohli 1

- Advertisement -

ஆனால் அதனை தற்போது தகர்த்துள்ள விராட் கோலி 195 இன்னிங்ஸ்களில் தனது சொந்த மண்ணில் பத்தாயிரம் ரன்களை கடந்து அதிவேக பத்தாயிரம் ரன்களை சொந்த மண்ணில் அடித்த வீரர் என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இதனால் 219 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 223 இன்னிங்ஸ்களில் பத்தாயிரம் ரன்களை கடந்து மூன்றாவது வீரராக இருக்கிறார்.

அதற்கு அடுத்தபடியாக மஹேல ஜெயவர்தன , குமார சங்கக்காரா மற்றும் ஜாக்ஸ் காலிஸ் உள்ளனர்.இருந்த போதிலும் இவர்கள் அனைவருமே 200 இன்னிங்சுகளிலும் அல்லது அதற்குமேல் எடுத்துக்கொண்டு பத்தாயிரம் ரன்களை கடந்துள்ள நிலையில் , 200 இன்னிங்சுகளுக்கு கம்மியாக பத்தாயிரம் ரன்களை கடந்த ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே.

Kohli

இந்திய அளவில் பத்தாயிரம் ரன்களை கடந்து மொத்தமாக இதுவரை சச்சின் டெண்டுல்கர் 14,192 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்தபடியாக விராட் கோலி 10,002 ரன்கள் எடுத்து இரண்டாவது வீரராக தற்போது உள்ளார்.

- Advertisement -

14192 – சச்சின் டெண்டுல்கர் ( இந்தியா)

13117 – ரிக்கி பொண்டிங்
(ஆஸ்திரேலியா)

- Advertisement -

12305 – ஜாக்ஸ் காலீஸ்
(தென் ஆப்ரிக்கா)

12043 – குமார் சங்ககாரா(இலங்கை)

11679 -மஹேல ஜெயவர்த்தனே
(இலங்கை)

10,002 – விராட் கோலி (இந்தியா)

Advertisement