- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டக் அவுட் ஆனதன் மூலம் தோனியின் மோசமான சாதனையை முறியடித்த விராட் கோலி – விவரம் இதோ

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று நாட்டிங்காம் நகரில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட நேரத்திற்கு முன்பாகவே 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முதல் நாளை முடித்திருந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளை ஆரம்பித்த இந்திய அணி ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

சரியான நேரத்தில் முறையான பந்துகளை மட்டுமே அடித்து விளையாடிய அவர்கள் முப்பது ஓவர்களுக்கு மேல் விக்கெட் கொடுக்காமல் விளையாடினார்கள். இறுதியில் 38-வது ஓவரில் போது இந்த ஜோடி பிரிந்தது. தொடக்க வீரரான ரோகித் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்த போதுதான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் தான் சரிவு ஏற்பட ஆரம்பித்தது. அடுத்ததாக களமிறங்கிய புஜாரா நின்று விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கேப்டன் கோலி வந்த வேகத்திலேயே தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் மோசமான சாதனையை முறியடித்துள்ளார். அந்த சாதனை யாதெனில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9வது முறையாக கோலி தற்போது டக் அவுட் ஆகி உள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக தோனி எட்டு முறை டெஸ்ட் போட்டிகளில் டக் அவுட் ஆகியிருந்தார். அதனை தற்போது கேப்டனாக கோலி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by