போட்டி முடிந்ததும் ஹர்ப்ரீத் பிராரை பாராட்டிய விராட் கோலி. ரசிகர்களின் மனதை வென்ற செயல்

Brar-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 26 ஆவது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல்ஸ்சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் ராகுலின் சிறப்பான ஆட்டத்தினால் 179 ரன்களை குவித்தது.

அதனை தொடர்ந்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய பெங்களூர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதன் காரணமாக 34 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வி பெற்றது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பெங்களூர் அணி வீரர்களின் மோசமான ஆட்டம் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய ஹர்ப்ரீத் பிரார் 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த போட்டியில் பேட்டிங்கில் களம் இறங்கியவர் 25 ரன்கள் குவித்து மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தியது நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் துவக்கத்திலேயே படிக்கல் 7 ரன்களில் வெளியேற படித்தார் மற்றும் கோலி ஆகியோர் நிதானமாக விளையாடி வந்தனர்.

அந்த வேளையில் 11-ஆவது ஓவரை வீசிய அவர் முதல் பந்தில் கோலியையும், இரண்டாவது பந்தில் மேக்ஸ்வெல்லையும் கிளீன் போல்டாக்கி பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார். அதன் பின்னர் டிவில்லியர்ஸை ஆட்டமிழக்கச் செய்த இவர் ஒட்டுமொத்த பெங்களூரு அணியின் பேட்டிங் முதுகெலும்பை ஏன் உடைத்தார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ஹர்ப்ரீட் பிரார் பந்துவீச்சில் போல்டான விராத் கோலி போட்டி முடிந்ததும் அவரை சந்தித்து வாழ்த்துக் கூறியது மட்டுமின்றி அவருக்கு கை கொடுத்து தோளில் தட்டிக்கொடுத்தார். தனது விக்கெட்டை எடுத்தவர் என்றும் பாராமல் அவரது சிறப்பான ஆட்டத்தை பாராட்டி கோலி செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement