இவங்க 2 பேருக்கும் இடையே உள்ள பிரச்சனை உண்மைதானோ ? அம்பலமான பிளவு – ரசிகர்கள் அதிருப்தி

Ind

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எடுத்த பல முடிவுகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித்க்கும்-கோலிக்கும் இடையே உள்ள பிரச்சனை அம்பலமாகியுள்ளதாக ரசிகர்கள் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

sodhi

ஏனெனில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் ரோகித் உலகக் கோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வீரராக பார்க்கப்படுபவர். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் 4 சதங்களை விளாசிய அவரை ஏன் துவக்க வீரர் இடத்தில் இருந்து திடீரென கீழே இறங்கினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

அதே வேளையில் இடதுகை பேட்ஸ்மேன், வலதுகை பேட்ஸ்மேன் என ஓபனிங் அமைய வேண்டுமெனில் ரோஹித் மற்றும் இஷான் கிஷனை களமிறக்கி நான்காவது இடத்தில் ராகுலை களமிறங்கி இருக்கலாம். ஆனால் இதை எதையுமே செய்யாமல் திடீரென ராகுலுடன் இஷான் கிஷனை கோலி களமிறக்கினார்.

Williamson

அதேபோன்று ஓப்பனராகவே விளையாடி பழக்கப்பட்ட ரோஹித்தை திடீரென 3வது வீரராக களமிறக்கியது அணிக்கு பாதகமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸ்-இன் போது பந்து வீச்சிலும் ரோஹித் சில பந்துவீச்சாளர்களை பயன்படுத்துமாறு ஆலோசனைகளை வழங்கிய்தை கோலி ஏற்றவாறு தெரியவில்லை. இதன் காரணமாக அப்போதே சிறிதளவு சலசலப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மைய சொல்லனும்னா நியூசி அணிக்கெதிரான தோல்விக்கு இதுவே காரணம் – ஒப்புக்கொண்ட விராட் கோலி

இந்நிலையில் இந்த விடயம் பெரிதாக தற்போது மீண்டும் கோலி ரோகித்துக்கு இடையே மீண்டும் பிளவு இருக்கிறதோ ? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். அது மட்டுமின்றி இந்திய அணி தைரியமின்றி விளையாடியதாக போட்டி முடிந்து கோலி தெரிவித்தார். இதற்கெல்லாம் காரணம் என்ன ? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement