விராட் கோலி மட்டுமில்லங்க இவரோட கட்டமும் இன்னியோட முடியப்போகுது – அட இதை மறந்துட்டோமே

Kohli
- Advertisement -

இந்த உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னர் இந்த தொடருடன் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இதன் காரணமாக இந்த உலக கோப்பை தொடரை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என கேப்டன் விராட் கோலியும், இந்திய அணி வீரர்களும் விரும்பினர். அதேபோல் உலககோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் பலமான அணியாக இந்திய அணி பார்க்கப்பட்டாலும் சூப்பர் 12-சுற்றின் முதல் 2 போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது.

Shaheen-afridi-1

அதனை தொடர்ந்து தற்போது மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு வாய்ப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணி இடம்பெற்றுள்ள குழுவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டதால் தற்போது இந்திய அணி சூப்பர் 12-சுற்றின் இறுதி ஆட்டத்தில் நமீபியாவை இன்று சம்பிரதாயமாகவே எதிர்கொள்கிறது.

- Advertisement -

இந்த போட்டியின் முடிவுகள் ஏதும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் இந்த போட்டி ஒரு சாதாரணமான போட்டியாகவே அமைய உள்ளது. இதுதான் கேப்டனாக விராட் கோலிக்கு கடைசி போட்டி என்பதால் இந்த போட்டியின் மீது சற்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இனி வரும் தொடர்களில் டி20 போட்டிகளில் இந்திய அணியில் கோலி ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடர்வார் என்றும் இனி கேப்டனாக இவர் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டோடு அவர் ஐபிஎல் தொடரின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் இந்த போட்டி டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக கோலிக்கு கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Shastri

அதே வேளையில் நாம் அனைவரும் மறந்து விட்ட ஒன்று யாதெனில் ரவி சாஸ்திரிக்கும் இதுதான் கடைசி போட்டி. ஏனெனில் இந்த உலக கோப்பை தொடருடன் அவரது பதவிக்காலமும் முடிவுக்கு வருவதால் இன்றைய போட்டியோடு ரவி சாஸ்திரியும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. அவருடன் சேர்த்து பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் விலகுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை தோல்வி : விராட் கோலி மீது பி.சி.சி.ஐ எடுக்கவுள்ள நடவடிக்கை – விவரம் இதோ

எனவே கடந்த சில ஆண்டுகளாக வெற்றி கூட்டணியாக அமைந்து வந்த ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோரது கூட்டணி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இவர்கள் இருவரின் தலைமையில் இந்திய அணி பல சிறப்பான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் ஐசிசி கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற குறை மட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement