டி20 உலககோப்பை தோல்வி : விராட் கோலி மீது பி.சி.சி.ஐ எடுக்கவுள்ள நடவடிக்கை – விவரம் இதோ

kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. அதன்பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கிடையே பெரிய வெற்றியை பெற்றது. இருப்பினும் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 4 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்திய அணி சம்பிரதாய போட்டியாக நமீபியா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

indvsnz

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்திருந்தார். அதன்படி இன்றைய போட்டி தான் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக விராட் கோலிக்கு கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் போட்டிகளில் அணியில் கோலி பேட்ஸ்மேனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இந்த போட்டியுடன் அவர் கேப்டன் பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாட்டிற்கும், இந்திய அணியின் மோசமான தோல்விக்கு வீரர்களின் பேட்டிங் வரிசை, வீரர்களின் தேர்வு என அடுத்தடுத்து கோலி செய்த தவறே அதிகளவு சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

Williamson

இதன் காரணமாக தற்போது பிசிசிஐ அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் : இப்போது பிசிசிஐ விராட் கோலியின் செயல்பாடு மீது மகிழ்ச்சியாக இல்லை. அவரது கேப்டன்ஷிப் மீது அதிருப்தி நிலவுகிறது.

இந்திய அணி இந்த டி20 தொடரின் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேற இருப்பதனால் நிச்சயம் விராட் கோலியிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன் பதவியும் பறிக்கப்படும் என்று தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்றுக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement