ஆர்.சி.பி அணிக்காக சாதனையின் உச்சத்தை ஜோடியாக தொட்ட கோலி – படிக்கல் – விவரம் இதோ

Padikkal
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது.

tewatia

- Advertisement -

ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 4 வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் மிடில் ஆர்டரில் வந்த ஷிவம் துபே, ரியான் பராக், ராகுல் தேவாத்தியா ஆகிய சிறப்பான ஆட்டத்தினால் ராஜஸ்தான் அணி ஒரு டீசன்டான இலக்கை பெங்களூரு அணிக்கு நிர்ணயம் செய்து. அதனை தொடர்ந்து 178 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி சார்பாக துவக்க வீரரான தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராத் கோலி 72 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் பெங்களூரு அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது 4 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

padikkal

இந்நிலையில் இந்தப் போட்டியின் முடிவில் கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் இணைந்து ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணிக்காக மிகப்பெரிய சாதனையை ஒன்றினை நிகழ்த்தியுள்ளனர். அந்த சாதனை யாதெனில் இதுவரை 14 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த பார்ட்னர்ஷிப் ஆக இந்த ரன் குவிப்பு பெங்களூரு அணிக்காக அமைந்துள்ளது.

Padikkal

கோலி மற்றும் படிக்கல் ஆகியோர் இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 181 ரன்களை ஆட்டமிழக்காமல் குவித்துள்ளனர். இதற்கு முன்னதாக கெயில் மற்றும் தில்ஷான் ஆகியோர் பெங்களூர் அணிக்காக விளையாடிய போது 2013 ஆம் ஆண்டு 167 ரன்கள் அடித்தது முதல் விக்கெட்டுக்கு அடிக்கப்பட்ட அதிக ரன்களாக பெங்களூர் அணியை பொறுத்தவரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement