டெஸ்ட் தரவரிசை : விராட் கோலிக்கு ஏற்பட்ட சறுக்கல் – பும்ரா முன்னேற்றம் – பட்டியல் இதோ

Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களின் முடிவில் சிறப்பாக விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு பின்பு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரிவினை சந்தித்துள்ளார்.

Thakur

- Advertisement -

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 901 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 891 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லாபுஷேன் 878 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர். மேலும் நான்காவது இடத்தில் ஜோ ரூட் 846 புள்ளிகளுடன் உள்ளார்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் ஐந்தாவது இடத்திற்கு சரிந்து உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆன அவர் 791 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 6-வது இடத்திலும், பண்ட் 7வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bumrah

அதேவேளையில் இந்திய அணியின் பந்து வீச்சாளரான பும்ரா முன்னேற்றம் கண்டுள்ளார். அதன் தரவரிசையில் கம்மின்ஸ் முதலாவது இடத்திலும், அஸ்வின் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். முதல் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் தற்போது 10 இடங்கள் முன்னேறிய அவர் 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement