- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹார்டிக் பாண்டியாவின் மகனும் அவரைப்போன்று வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆகனும் – இந்திய வீரரின் விருப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியா மற்றும் செர்பிய மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிக் ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த வருட புத்தாண்டு முதல் தேதியன்று துபாயில் நடுக்கடலில் மோதிரம் மாற்றிக் கொண்ட அவர்கள் விரைவிலேயே தாங்கள் குழந்தை பெற இருப்பதாகவும் அறிவித்திருந்தனர்.

மேலும் அதன் பின்னர் இருவருக்கும் வெகு எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு அவர்கள் கூறியது போலவே ஜூலை 30ஆம் தேதி குஜராத் மாநிலம் வதோதராவில் ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தை பிறந்ததை சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்துடன் அறிவித்தனர்.

- Advertisement -

அவரின் அந்த பதிவிற்கு சக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது தனது சகோதரரான ஹார்டிக் பாண்டியா தந்தை ஆனதை அவரது அண்ணன் க்ருனால் பாண்டியாவும் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

மேலும் அந்த புகைப்படத்தின் கீழ் கிரிக்கெட்டைப் பற்றி பேசுவோம் என்ற தலைப்பில் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பலரும் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகையில் ஹார்டிக் பாண்டியா வின் நெருங்கிய நண்பரான ராகுல் அந்த பதிவிற்கு தனது கருத்தாக ” அவன் வேகப்பந்து வீச்சாளராக வேண்டும்” என அவரிடம் கூறுங்கள் என்று கமென்ட் பகுதியில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியின் மிக நெருக்கமான நண்பர்களாக பார்க்கப்படும் ராகுல் மற்றும் பாண்டியா தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து சர்ச்சையான பேச்சின் மூலம் சில போட்டிகள் விளையாட தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by