
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதம் மற்றும் 18 அரைசதம் என 3632 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டும் இன்றி 85 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 சதம் மற்றும் 18 அரைசதம் என 3043 ரன்களை குவித்துள்ளார். அதோடு 72 டி20 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 22 அரைசதம் என 2265 ரன்கள் குவித்துள்ளார்.
இப்படி மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இன்றளவும் நட்சத்திர வீரராக தொடர்கிறார். அதுமட்டுமின்றி தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் இந்திய அணியின் துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார்.
அந்தவகையில் இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 6 இன்னிங்ஸ்களில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 375 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி எஞ்சியுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டியிலும் விளையாட இருக்கும் அவர் இதே பார்மை தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதுவரை 62 ரன்கள் சராசரியுடன் சிறப்பாக விளையாடி வரும் அவர் இங்கிலாந்து மண்ணில் அதிக சதம் எடுத்த இந்திய துவக்க வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மேலும் 60 ரன்களை குவிக்கும் பட்சத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை கே.எல் ராகுல் இந்திய அணிக்காக 218 சர்வதேச போட்டிகளில் விளையாடி 8940 ரன்களை குவித்திருக்கிறார். இதில் 19 சதம் மற்றும் 58 அரைசதங்களும் அடங்கும்.
இதையும் படிங்க : இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள தொடரில் இருந்து நிதீஷ் ரெட்டி திடீர் விலகல் – என்ன காரணம்?
இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் மேலும் 60 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 9000 ரன்களை அடிக்கப்போகும் இந்திய வீரராகவும் மாற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.