- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 ஆவது இந்திய விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுல் – நிகழ்த்தவுள்ள சாதனை

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று தரம்சாலா நகரில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டி தற்போது வரை மழை காரணமாக துவங்காமல் இருக்கும் வேளையில் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.

கே.எல் ராகுல் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை :

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் கே.எல் ராகுல் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் கே.எல் ராகுல் ரிஷப் பண்ட்டை தாண்டி முதன்மை விக்கெட் கீப்பராக ஒருநாள் போட்டிகளில் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இதுவரை இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர் 54 போட்டிகளில் விளையாடி 48 இன்னிங்ஸ்களில் 1895 ரன்களை குவத்துள்ளார். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த மூன்று ஆட்டங்களில் அவர் 105 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 2000 ரன்களை பூர்த்தி செய்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இவருக்கு முன்னதாக கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடிய ராகுல் டிராவிட் 73 போட்டிகளில் விளையாடி 2300 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று அவருக்கு அடுத்து தோனி 2004 ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் விக்கெட் கீப்பராக 347 போட்டிகளில் விளையாடி 10599 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் 3 ஆவது இடத்திற்கு போட்டியில் இருக்கும் 3 வீரர்கள் – மோர்னே மோர்கல் அளித்த பேட்டி

இவர்கள் இருவருக்கு அடுத்து கே.எல். ராகுல் தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்களை குவிக்க காத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை விக்கெட் கீப்பராக அதிக ரன்களை குவித்த வீரராக குமார் சங்கக்கார 13341 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -