RCB vs KXIP : போட்டியின் இடையே லைவ் பேட்டியில் கெட்ட வார்த்தையில் பேசி சர்ச்சையில் சிக்கிய ராகுல் – விவரம் இதோ

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சினை தேர்வு செய்ததால்

Rahul
- Advertisement -

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சினை தேர்வு செய்ததால் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் கோலி மற்றும் பார்த்திவ் பட்டேல் ஆடினார்கள்.

Parthiv

- Advertisement -

இந்த போட்டியில் கோலி 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அப்போது போட்டியின் மத்தியில் மைதானத்தில் இருந்த பஞ்சாப் அணியின் விக்கெட்கீப்பர் ராகுலிடம் வர்ணனையாளர்கள் லைவ் மூலம் பேசினார்கள். அப்போது போட்டியின் நிலைமை பற்றி ராகுல் வர்ணனையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது பெங்களூரு வீரரான பார்த்திவ் பட்டேல் பவுண்டரி ஒன்றினை அடிக்க அதனை கண்டு கடுப்பான ராகுல் தான் லைவ் நிகழ்ச்சியில் போட்டியின் வர்ணனையாளர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை மறந்து ஆங்கிலத்தில் எப்**** என்ற வார்த்தையில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தையினை சத்தமாக பயன்படுத்தினார். அந்த வார்த்தை தொலைக்காட்சியில் தெளிவாக கேட்டது. ராகுலின் இந்த செயல் தற்போது பிரச்சனையாக மாறியுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து பேசிய ராகுலுக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Pandya 1

ஐ.பி.எல் போட்டிகளை பெரியவர்கள் மட்டுமல்ல சிறிய வயது உடைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்து வருகின்றனர். அப்படி இந்தியா முழுவதும் பார்க்கப்படும் ஒரு பிரபலமான தொடரின் லைவ் பேட்டியில் ராகுல் இப்படி கெட்ட வார்த்தை பயன்படுத்தியதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்பினையும், விமர்சனத்தையும் அளித்து வருகின்றனர்.

Advertisement