நேற்று முன்தினம் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு இளம் வீரரான ராகுல் கேப்டன் பொறுப்பை முதன்முறையாக ஏற்று விளையாடினார். தான் பொறுப்பேற்று விளையாடிய முதல் போட்டியிலேயே ராகுல் தனது சிறப்பான கேப்டன்சியை வெளிப்படுத்தினார். இருப்பினும் பஞ்சாப் அணி சூப்பர் ஓவர் வரை சிறப்பாக விளையாடி இறுதியில் தோல்வி அடைந்தது.
அவர்களின் இந்த தோல்வியில் ஒருசில சர்ச்சை இருந்தாலும் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடியது என்று கூறலாம். பஞ்சாப் அணியில் துவக்க வீரரான மாயங்க் அகர்வால் தனியாக நின்று போட்டியில் இறுதி வரை போட்டியை சுவாரஸ்யமாக எடுத்துச் சென்றார். இந்நிலையில் தற்போது ராகுல் இந்த போட்டியில் சக வீரரை கன்னட வார்த்தையில் அசிங்கமாக திட்டிய சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்த போட்டியில் கேப்டனாக விளையாடிய ராகுல் பீல்டிங்கின் போது பீல்டர்களை எங்கெங்கே நிற்க வேண்டும் என்றும் செட் செய்து கொண்டிருந்தார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் பந்துவீசும் முன்னர் பீல்டிங்கை சரி செய்து கொண்டிருந்த ராகுல் நடவடிக்கையில் சக வீரர் ஒருவரை அசிங்கமாக திட்டி உள்ளார். இது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது.
மேலும் தான் இவ்வாறு பேசுகிறோம் என்பதை உணர்ந்த ராகுல் அப்படியே வாயில் கை வைத்து மூடிக் கொள்கிறார். பஞ்சாப் அணியில் கர்நாடக அணி வீரர்களான கருண் நாயர், அகர்வால் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் விளையாடினர். அவர்களில் ஒருவரை ராகுல் கன்னட வார்த்தையில் திட்டி இருக்க கூடும் என்று தெரிகிறது.
KL : Munde Baaro lowda
😂🤣🤣🤣 @akakrcb6 @karthik_jammy @Im__Arfan pic.twitter.com/TAgJTeMHTw
— RCB Forever ™ (@Yuva_1234) September 20, 2020
ராகுல் அவரை நோக்கி ” முண்டே பாரோ ல*டா” (கன்னடம்) முன்னே வா ல*டா (தமிழ்) என்று உரக்கக் கத்தினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.