IND vs ZIM : வெற்றிபெற்றாலும் என்னால அதை செய்ய முடியல. வருத்தத்துடன் பேசிய – கே.எல் ராகுல்

Rahul-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்ற முடிந்தது. முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியிருந்த இந்திய அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND vs ZIM Shikhar Dhawan

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது 38.1 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணி ஆனது 25.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கி ஆட்டம் இழக்காமல் 43 ரன்கள் குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேட்டியளித்த இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் கூறுகையில் :

KL Rahul

எங்களுக்கு இந்த போட்டியின் சேசிங்கின் போது எந்தவித பதட்டமும் இல்லை. ஏனெனில் பின் வரிசையில் கூட பேட்டிங் செய்யும் அளவிற்கு இந்திய அணியின் பலம் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இந்த போட்டியில் டாப் ஆர்டரில் விக்கெட் விழுந்தும் மிடில் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்ததால் எங்களால் வெற்றி பெற முடிந்தது.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மனாக களத்தில் சிறிது நேரம் நின்று விளையாட வேண்டியது அவசியம். இந்த சற்று நேரம் பேட்டிங் செய்து ரன்களை குவிக்க விரும்பினேன். ஆனால் இந்த போட்டியில் என்னால் அதனை செய்ய முடியவில்லை. ஜிம்பாப்வே அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்கள்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான அம்பயர்களால் இந்தியா தோல்வியடைந்த 3 மறக்க முடியாத போட்டிகள்

வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் போதே அவர்கள் அற்புதமாக பந்துவீசி இருந்தார்கள். அவர்களுடைய பந்துவீச்சு எங்களுக்கு சவாலாக இருந்தது. முதல் இரண்டு போட்டியிலுமே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement