பெங்களூர் அணிக்கு எதிரான இந்த சிறப்பான வெற்றிக்கு இதுவே கரணம் – ராகுல் ஓபன் டாக்

Rahul
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 6-வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

kxipvsrcb

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 69 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 132 ரன்களை வைத்தார். அதை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 17 ஓவர்களில் முடிவில் 109 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் தேர்வானார். இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : இந்த போட்டிக்கு முன்னர் நான் என்னால் எப்படி விளையாட முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்.

rahul 4

ஆனால் மேக்ஸ்வெல் உடன் பேசிய கலந்துரையாடலில் அவர் நீங்கள் கிண்டல் செய்ய வேண்டாம் உங்களால் அடித்து ஆட முடியும் என்று கூறினார். மேலும் அதன் பிறகு யோசித்த நான் மிடில் ஆர்டரில் பந்துகளை சந்தித்தால் நன்றாக அடிக்க முடியும் என்று உணர்ந்தேன், அதன்பிறகு இந்த போட்டியில் நான் சிறப்பாக பந்துகளை சந்தித்து ரன்களை குவத்தேன்.

agarwal 1

கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் பேட்டிங் என இரண்டையும் நான் தனித்தனியே பார்க்கவில்லை ஒரு பேட்ஸ்மேனாக என்னால் என்ன செய்ய முடியும் ஒரு கேப்டனாக என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் இதற்கு உதவினர் இந்த வெற்றிக்கு எங்களது அணியின் ஒட்டுமொத்த சிறப்பான ஆட்டமே காரணம் என்று அவர் கூறினார்.

Advertisement