
இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சின் காரணமாக கடைசி நாளில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணியானது இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அத்தியது. இங்கிலாந்து மண்ணில் புதிய கேப்டனாக சுப்மன் கில் தலைமையில் விளையாடிய இந்திய அணி எவ்வாறு செயல்படப்போகிறது? என்ற கேள்வி இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தது.
ஆனால் அதெற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக முதல் தொடரையே இந்திய அணி டிரா செய்துள்ளது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. நேற்று நடைபெற்று முடிந்த இந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் வீரர்கள் இந்த வெற்றியை மைதானத்திலேயே உற்சாகமாக கொண்டாடி இருந்தனர். அப்போது வெற்றி குறித்து பல்வேறு வீரர்களும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்திருந்தனர்.
அந்த வகையில் இந்த தொடரில் அனுபவ வீரராக பங்கேற்று விளையாடிய கே.எல் ராகுல் இந்த தொடரில் தான் சந்தித்த சில தருணங்கள் குறித்து வெளிப்படையான கருத்துக்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த வெற்றி உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் கடந்த பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் விளையாடி வருகிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரினை வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் போது இருந்த மகிழ்ச்சி ஒப்பிட முடியாத ஒன்று.
அதேவேளையில் டெஸ்ட் தொடர் நிலைத்து நிற்குமா? நிற்காதா? என்று பல கேள்விகள் இருந்து வருகின்றன. ஆனால் அதற்கெல்லாம் விடை கொடுக்கும் விதமாக இந்த டெஸ்ட் தொடரானது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியா இங்கிலாந்து இரண்டு அணிகளுமே தங்களது கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடர் மிகவும் அசத்தலாக நடைபெற்றது.
இறுதியில் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் அடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்க்கான அழகுதான். ஏனெனில் இரண்டு அணிகளுமே தகுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தொடரில் கிடைத்த நம்பிக்கையின் மூலம் இனி எதிர்காலத்தில் இந்திய அணி பல்வேறு டெஸ்ட் வெற்றிகளை குவிக்கும். முதல் இரண்டு வாரங்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் இல்லாமல் இந்திய அணியுடன் இருந்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இதையும் படிங்க : கம்பீர் மற்றும் மெக்கல்லம் ஆகியோர் எடுத்த முடிவு.. ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் – நடந்த வினோதம்
அதன் பின்னர் அணியில இடம் பெற்றிருந்த இளம் வீரர்கள் அனைவரும் என்னிடம் வந்து இங்கிலாந்து சூழ்நிலை பற்றி ஆலோசனைகளை கேட்டார்கள். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. நான் அனைவருக்குமே இங்குள்ள சூழ்நிலையில் குறித்து ஆலோசனைகளை வழங்கினேன். இந்த தொடரில் சுப்மன் கில் பேட்ஸ்மேனாக மிகச் சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஒரு கேப்டனாகவும் அவர் நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் அவர் சிறந்த டெஸ்ட் கேப்டனாக மாறுவார் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.