சஞ்சு சாம்சனுக்கு ரெகுலரா வாய்ப்பு கிடைக்காம போக இதுதான் காரணம் – கே.எல் ராகுல் கொடுத்த விளக்கம்

KL-RAHUL-and-SAMSON
- Advertisement -

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரிலும், உள்ளூர் தொடர்களிலும் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விளையாட வேண்டிய ஒரு தகுதியான வீரர் என ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்து வருகிறது.

ஆனால் முக்கியமான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதோடு அவ்வப்போதே அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சஞ்சு சாம்சன் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது போட்டியில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார்.

அந்த போட்டியில் 114 பந்துகளை சந்தித்த அவர் 108 ரன்களை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் கேரளாவை சேர்ந்த முதல் வீரராக ஒருநாள் சதத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் இவ்வளவு திறமை இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பது குறித்து அந்த போட்டியின் முடிவில் இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் ஒரு கருத்தினை பகிர்ந்து இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் கே.எல் ராகுல் கூறுகையில் : சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் ஒரு திறமையான வீரர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இந்திய அணியில் நிலையான வீரர்கள் சரியான இடத்திற்கு இருந்ததாலும், வேறு பல காரணங்களாலும் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க : இதுக்கு குடோன்லயே இருக்கலாம்.. காயத்தால் விலகிய ருதுராஜுக்கு மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

ஆனால் தற்போது இங்கு கிடைத்த வாய்ப்பில் அவர் டாப் ஆர்டரில் களமிறங்கி தனது திறமையை நிரூபித்துள்ளார். இனிவரும் காலங்களிலும் சஞ்சு சாம்சன் நிச்சயம் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement