இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கான்பூர் நகரில் செப்டம்பர் 27-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற்ற ஐந்தாவது நாள் ஆட்டத்துடன் நிறைவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
எனது சிறப்பான ஆட்டத்திற்கு ரோஹித் தான் காரணம் :
இந்த போட்டியின் முதல் நாள் 36 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் ஆகியவையும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதனால் எஞ்சியுள்ள இரண்டு நாட்களில் இந்த போட்டியின் முடிவு கிடைக்காது என்று பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் அந்த நிலையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அப்படியே மாற்றியது. அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணி 233 ரன்களை முட்டும் குவிக்க தங்களது முதல் இன்னிங்சில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி வங்கதேச அணியை 146 ரன்களுக்கு சுருட்டியது. இதன் காரணமாக 94 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றி கோட்டை எட்டியது. இந்நிலையில் இந்த போட்டியின் போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் கே.எல் ராகுல் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் என 68 ரன்கள் குவித்து அசத்தினார்.
இந்நிலையில் அவரது அதிரடியான இந்த ஆட்டம் குறித்து பேசியிருந்த கே.எல் ராகுல் கூறுகையில் : தொடக்கத்தில் இருந்தே எங்களுக்கு தெளிவான திட்டம் வழங்கப்பட்டது. மழை காரணமாக இரண்டு நாட்களை இழந்து விட்டதால் மீதமுள்ள நேரத்தில் என்ன செய்ய முடியும் என்பது குறித்து தெளிவான திட்டம் எங்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் வெற்றியை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க : 7 விக்கெட்ஸ்.. ட்ராவாக வேண்டிய போட்டியை.. வங்கதேசத்தை தெறிக்க விட்டு பாகுபலிப் போல வென்ற இந்தியா
இந்த போட்டியின் முதலில் நாங்கள் ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் விக்கெட் விழுவதை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்று ரோஹித் சர்மா எங்களுக்கு தெளிவான திட்டத்தைக் கூறியிருந்தார். அதன் காரணமாகவே நான் களமிறங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முடிந்தது என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.