7 விக்கெட்ஸ்.. ட்ராவாக வேண்டிய போட்டியை.. வங்கதேசத்தை தெறிக்க விட்டு பாகுபலி போல வென்ற இந்தியா

IND vs BAN 3
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த நிலையில் 2வது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்கியது. மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் முதல் நாள் முடிவில் 107-3 ரன்கள் எடுத்தது. அடுத்த 2 ஆட்டம் நாட்கள் மழையால் ரத்து செய்யப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4வது நாளில் அதிரடியாக பந்து வீசிய இந்திய அணி வங்கதேசத்தை 233 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக மோனிமுள் ஹைக் 107* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தெறிக்க விட்ட இந்தியா:

அதன் பின் எஞ்சிய ஒன்றரை நாட்களில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் வங்கதேச பவுலர்களை அடித்து நொறுக்கிய இந்தியா 285-9 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்கள் குவித்த அணியாக இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 48, ராகுல் 68, கில் 39, கேப்டன் ரோஹித் 23 ரன்களை அதிரடியாக எடுத்தனர்.

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன், ஷாகிப் அல் ஹசன் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 56 ரன்கள் பின்னலையுடன் களமிறங்கிய வங்கதேசத்தை மீண்டும் அட்டகாசமாக பந்து வீசிய இந்தியா 146 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக சாத்மன் இஸ்லாம் 50, ரஹீம் 37 ரன்கள் நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அசாத்திய வெற்றி:

இறுதியில் 95 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் 8, கில் 6 ரன்களில் மெஹதி ஹசன் சுழலில் அவுட்டானார்கள். இருப்பினும் ஜெய்ஸ்வால் 51, விராட் கோலி 29* ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை 2 – 0 (2) என்ற கணக்கில் ஒய்ட்வாஷ் செய்து தோற்கடித்த இந்தியா இத்தொடரின் கோப்பையை வென்றது.

அந்த வகையில் நாங்கள் பாகிஸ்தான் கிடையாது என்பதை வங்கதேசத்திற்கு காட்டிய இந்தியா சொந்த மண்ணில் தாங்கள் கில்லி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அதை விட 3வது நாளில் டிராவில் முடிவடைய வேண்டிய இப்போட்டியை சரவெடியாக விளையாடி இழுத்துக்கொண்டு வந்த இந்தியா பாகுபலியைப் போல 45 ஓவர்கள் மீதம் வைத்து அசாத்தியமான வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விராட் கோலி விடயத்தில் கம்பீர் செய்தது எனக்கு சுத்தமா பிடிக்கல.. நேரடியாக பதிலளித்த – சுனில் கவாஸ்கர்

அத்துடன் இந்தியா இப்போட்டியில் ஒரு மெய்டன் ஓவரை கூட சந்திக்காமல் அதிரடியாக பேட்டிங் செய்து வென்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் மெய்டன் ஓவரை எதிர்கொள்ளாமலேயே வென்ற முதல் ஆசிய அணியாகவும் இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது.

Advertisement