இங்க வந்தது எப்படி தெரியுமா இருக்கு? தனது சொந்த ஊரில் விளையாட இருப்பது குறித்து பேசிய – கே.எல் ராகுல்

KL-Rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 51 டெஸ்ட் போட்டிகள், 77 ஒருநாள் போட்டிகள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்து 2013-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 132 போட்டிகளில் விளையாடியது மட்டுமின்றி தற்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

சின்னசாமி மைதானத்தில் விளையாடுவது குறித்து பேசிய கே.எல் ராகுல் :

சமீப காலமாகவே அவருக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ள அவர் இந்த தொடரில் விளையாட தயாராகி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி அவரது சொந்த மண்ணான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் வேளையில் அங்கு தனக்கு இருக்கும் நினைவுகள் குறித்து இந்த போட்டிக்கு முன்னதாக கே.எல் ராகுல் சில கருத்துக்களை பகிர்ந்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னுடைய சொந்த மைதானத்தில் விளையாட இருப்பது மிகவும் நெகிழ்ச்சிகரமாக இருக்கிறது. நான் எனது 11 வயதில் முதன்முதலாக இந்த மைதானத்தில் விளையாட ஆரம்பித்தேன். தற்போது 32 வயதாகும் நான் 20 ஆண்டுகளாக இங்கு என்னுடைய நேரத்தை அதிகமாக செலவு செய்துள்ளேன்.

- Advertisement -

இந்த மைதானத்தில் எப்போது நான் விளையாட வந்தாலும் அது எனக்கு நெகிழ்ச்சிகரமான ஒன்றாக இருக்கும். இந்த மைதானத்தில் நான் பயிற்சிக்கு வந்த போது இரண்டு நிமிடங்கள் என் மனதில் ஓடியது மூன்று மணி நேர திரைப்படம் போன்று இருந்தது.

இதையும் படிங்க : இதை செய்ஞ்சா டெஸ்ட் மேட்ச்ல விளையாட எனக்கு வாய்ப்பு தரன்னு மேனேஜ்மென்ட் சொன்னாங்க – சாம்சன் கருத்து

சிறு வயதில் நான் விளையாடியது, ரஞ்சிக்கோப்பையில் விளையாடியது, ஐபிஎல் தொடரில் விளையாடியது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது என இந்த மைதானத்தில் ஏகப்பட்ட நிகழ்வுகள் எனக்கு இருந்துள்ளன. இவற்றை நினைக்கும் போது உணர்ச்சிகரமாக இருக்கிறது. உண்மையிலேயே எனது சொந்த மைதானமான இந்த இடத்தில் மக்களின் முன்னிலையில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement