எவ்ளோ ட்ரை பண்ணிட்டோம். ஆனால் மீண்டும் அதே தவறு – தோல்வி குறித்து ராகுல் வேதனை

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மீண்டும் இந்திய அணி தோல்வியை சந்தித்து. அதன் காரணமாக இந்த தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் இழுந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி இழுந்திருந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட்டு வரும் ராகுலுக்கு இந்த தொடரில் ஏற்பட்ட தோல்வி மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.

vanderdussen

- Advertisement -

அதன்படி நேற்றைய 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 287 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில் : தென் ஆப்பிரிக்க வீரர்கள் அவர்களது சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

நாங்கள் இந்த போட்டியிலும் சில தவறுகளை செய்து விட்டோம். இந்த தொடரின் மூலம் பல்வேறு விடயங்களை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முக்கியமாக பேட்டிங் செய்யும்போது பார்ட்னர்ஷிப் எவ்வளவு அவசியம் என்பதை கடந்த இரண்டு போட்டிகளில் மூலமாக தெரிய வந்துள்ளது. மிடில் ஆர்டரில் நிச்சயம் இன்னும் முன்னேற்றம் தேவை. பெரிய பெரிய தொடர்களில் விளையாடும் போது நிச்சயம் மிடில் ஆர்டரில் பலம் என்பது அவசியம். அந்த வகையில் இன்னும் நாங்கள் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம்.

dekock

பந்துவீச்சை பொறுத்தவரை இந்த போட்டியில் நாங்கள் சற்று சுமாராகவே செயல்பட்டதாக கருதுகிறேன். ஏனெனில் 280 ரன்களை துரத்துவது என்பது எளிதாக இருக்காது என்று நினைத்த வேளையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

இதையும் படிங்க : தேவையில்லாத மோசமான சாதனை பட்டியலில் சேவாக் மற்றும் ரெய்னா உடன் இணைந்த – விராட் கோலி

அதேபோன்று ஷர்துல் தாகூர் அணிக்கு ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். அவரால் பின்வரிசையில் களமிறங்கி ரன்களை குவித்து அணிக்கு பங்களிப்பு தரமுடிகிறது. பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்கள். இருப்பினும் எங்களது அணியில் உள்ள தவறுகளை சரி செய்து கொண்டு விரைவில் நாங்கள் வெற்றிக்கு திரும்ப வேண்டியது அவசியம் என ராகுல் வேதனையுடன் தனது கருத்தை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement